ஞாயிறு, 29 மே, 2011

தமிழகம் முழுதும் ஆண்ட சமுதாயம் நம் முத்தரைய சமுதாயம். சோழர், பாண்டியர், சேரர் ஆகிய மூவேந்தர்களும் முத்தரையர்களே. காலத்தின் போக்கில் சாதிய சமுதாயம் உருவான போது முத்தரையர்களில் இருந்துதான் பிற சமூகங்கள் பிரிந்திருக்க வேண்டும். மூவேந்தர்களும் ஆட்சி செய்த பகுதிகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையினராக முத்தரைய மக்களும், அதிலிருந்து பிரிந்த சமூகங்களும் தற்போதும் அப்பகுதிகளில் மிகுந்திருக்கிறனர்.   ஆட்சியாளராக இருந்தது மட்டுமல்லாமல் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீன் பிடித்தல், வேட்டையாடுதல் போன்ற பல்வேறு தொழில்களிலும் முத்தரைய சமுதாயம் 

சனி, 28 மே, 2011

வாங்க நடிக்கலாம் 
குறும்படங்களில் 
ஆர்வம் உள்ளவர்கள்  
தொடர்பு கொள்க டைரக்டர் : 9489831511
நாளைய உலகம் 
உன்னை பின் தொடர
நீ முன்னே 
செல்ல வேண்டும்.
வெற்றி எளிதுதான் 
தோல்வியை அதிகம் 
சுவைத்தவனுக்கு.....
பந்தயத்தில் ஓடி தோற்றாலும் 
நானும் வென்றவன்தான்
எனக்கு பின்னால் 
ஓடி வந்தவர்களை.
காதலில் வெல்வது போல் 
காதலில் தோற்பதும் 
சுகமானதுதான் 
ஆதலினால்...
காதல் செய்வோம் .

செவ்வாய், 24 மே, 2011

காதல் 
சுகமானதா? சோகமானதா?
சுகமானது எனில் 
கல்யாணத்திற்கு பின் கசப்பதேன்?
சோகமானது எனில் 
மீண்டும் மீண்டும் 
காதலிப்பது ஏன்?

திங்கள், 23 மே, 2011

அறிவுரை

எந்த புள்ளியிலிருந்து 
தொடங்கியது 
நம் வாழ்க்கை?
புரிந்து கொள்ளமுயலாமல்
ஏதேதோ தத்துவங்களை 
மற்றவருக்கு அறிவுரையாக 
தந்துகொண்டிருக்கிறோம் 

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்புகளுடன்தான்
ஓடி வருகின்றன!
நட்பும் உறவும்....
நம்மிடம் அன்பை.... 

வாழ்க்கையும் மதிப்பும்

நெடிய பயணம் நிறைந்தது வாழ்க்கை. இதில் மனம் தளர்ந்து சோர்ந்து விட்டால் இலக்கை அடைவது கடினம். சோர்ந்து விடாமல் இருக்கத்தான் இறைவன் உறவுகளையும்,நட்பையும் படைத்திருக்கிறான். உறவையும்,நட்பையும் கண்ணாடியைப்போல் பாவிக்க வேண்டும். நம் கவனம் குறைந்தால் இழப்பு கண்ணாடிக்கு இல்லை, நமக்குத்தான். நட்பிடமும், உறவிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். அவர்களுக்கு தேவையான உதவியை நீங்களே முன் வந்து செய்யுங்கள். உதவியதற்காக  உங்களை எல்லாரும் கொண்டாட வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். உங்களைப் பற்றி தவறாக மற்றவர்கள் தவறாக கருதினாலும் தன்னிலை விளக்கம் தாமே முன் வந்து கொடுக்காதீர்கள். அது உங்கள் மதிப்பை கெடுக்கும். பிறர் தானாகவே நம்மை புரிந்து கொண்டால் நம் மதிப்பு உயரும்.   

வெள்ளி, 20 மே, 2011

அழைப்பு

 மே 13 திருச்சியில் நடைபெறும் முத்தரையர் சதய விழாவிற்கு நம் சொந்தங்கள் அனைவரையும் முக புத்தகத்தின் வாயிலாக வரவேற்கிறேன். 

சனி, 14 மே, 2011

திருச்சி - முத்தரையர் வசிக்கும் ஊர்கள்

திருச்சி மாவட்டத்தில் பெரும்பான்மையாக முத்தரையர் வசிக்கும் ஊர்கள்.

பூனாம்பாளையம், ராசாம்பாளையம், தீராம்பாளையம், திருவெள்ளறை,சி.அய்யம்பாளையம், எதுமலை, வலையூர்,அக்கரைப்பட்டி, வடக்கிப்பட்டி,காளவாய்பட்டி, கரட்டாம்பட்டி, பகலாவடி, பெரமங்கலம், புலிவலம், எட்டரை, அழகியமனவாளம், சுக்காம்பட்டி, வாழ்மால்பாளையம், தத்தமங்கலம், தழுதாளப்பட்டி, மூவானூர், மூவராயன்பாளையம், குருவம்பட்டி,திருப்பஞ்சிலி, பழையூர், திருவரங்கப்பட்டி, கல்லூர், காவக்காரபாளையம், உளுந்தங்குடி, நொச்சியம், துடையூர், கவுண்டம்பட்டி, சோழங்கநல்லூர், காட்டுக்குளம், முருங்கப்பட்டி, ஸ்ரீரங்கம், வரகனேரி, லால்குடி, திருமங்கலம், மணக்கால், திருமணமேடு, சமயபுரம், பிக்சாண்டர்கோயில், திருவாசி, சோமரசம்பேட்டை, அதவத்தூர், முடிகண்டம், மணிகண்டம், துறையூர், மன்னச்சநல்லூர்.