திங்கள், 23 மே, 2011

வாழ்க்கையும் மதிப்பும்

நெடிய பயணம் நிறைந்தது வாழ்க்கை. இதில் மனம் தளர்ந்து சோர்ந்து விட்டால் இலக்கை அடைவது கடினம். சோர்ந்து விடாமல் இருக்கத்தான் இறைவன் உறவுகளையும்,நட்பையும் படைத்திருக்கிறான். உறவையும்,நட்பையும் கண்ணாடியைப்போல் பாவிக்க வேண்டும். நம் கவனம் குறைந்தால் இழப்பு கண்ணாடிக்கு இல்லை, நமக்குத்தான். நட்பிடமும், உறவிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். அவர்களுக்கு தேவையான உதவியை நீங்களே முன் வந்து செய்யுங்கள். உதவியதற்காக  உங்களை எல்லாரும் கொண்டாட வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். உங்களைப் பற்றி தவறாக மற்றவர்கள் தவறாக கருதினாலும் தன்னிலை விளக்கம் தாமே முன் வந்து கொடுக்காதீர்கள். அது உங்கள் மதிப்பை கெடுக்கும். பிறர் தானாகவே நம்மை புரிந்து கொண்டால் நம் மதிப்பு உயரும்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக