புதன், 8 ஜூன், 2011


தஞ்சாவூர் - தனஞ்செயன் என்ற மன்னன் ஆட்சி செய்த இடம். தனஞ்செயன் ஊர் = தஞ்சாவூர். தனஞ்செயன் முத்தரையர் வம்சத்தை சேர்ந்தவர். அதன் பின்னரே சோழர் காலத்தில்,அவர்கள் தஞ்சாவூர் தலைநகராக மாற்றிகொண்டனர்.
அதே போல் முத்துராசாபட்டினம் மருவி மதராசாபட்டினமாக மாறியது. சென்னப்ப நாயக்கர் ஆட்சி செய்த பகுதியே சென்னியப்ப பட்டினமாக மருவி காலப்போக்கில் சென்னைபட்டினமாக மாறி இன்று சென்னையாக உள்ளது.

ஞாயிறு, 5 ஜூன், 2011

இரு துளி 
என் கண்ணிலிருந்து வழிந்தாலே 
தாங்கிக்கொள்ள  மறுக்கிறது 
அம்மாவின் இதயம்....

அனைவரின் மனமும் 
மகிழ்கிறது 
கருத்த மேகம் மட்டும் ...
மழையை பொழிந்தால்...

இரண்டுமே வெவ்வேறா?
தண்ணீர்தானா?


கொட்டும் மழை

கூரையை பிய்த்துக்கொண்டு


குடிசைக்குள் பெய்கிறது....


குளிரில் நடுங்கும் மழலைகள்

,
நனையும் நாளைய உணவு


பொருட்கள்....

என் வயித்தெரிச்சலுடன்


திட்டித்தீர்கிறேன் மழையையையும் 



கடவுளையும்.....

மழையும் தூவானமும்


நின்றபின் மழலைகள்


முகத்தில் மாசற்ற மகிழ்ச்சி...


அதே மகிழ்ச்சி எனக்குள்ளும்


வானவில்லை கண்டதும்...

நன்றியுடன் கடவுளை நினைக்கிறேன்

இன்னொரு மழைக்காலம் வரை


காத்திருக்க வேண்டும் வானவில்லை காண...