வெள்ளி, 15 ஜூலை, 2011

திருச்சி மாவட்டம் முத்தரையர்கள் கோட்டை...


திருச்சி மாவட்டத்தின் கிராம பகுதிகளில் முத்தரையர் சமூக மக்கள் பெருமளவில் வசிக்கிறார்கள். முத்தரையர்கள் திருச்சி மாவட்டத்தின் வட பகுதி முழுவதும் ஆட்சி புரிந்திருக்க வேண்டும். ஒரு சமூக மக்கள் பெருமளவில் வசிக்கும் போது சிறுபான்மையினரின் கீழ் வாழ்ந்திருக்க முடியாது. மூவானூர், மூவாராயண் பாளையம், தீராம்பாளையம்,
 பூனாம்பாளையம் போன்ற கிராமங்கள் முத்தரைய தலைவர்களின் பெயரால் உருவாகியிருக்க வேண்டும். சோழர்களின் கீழ் அல்லது பல்லவர்களின் இப்பகுதியை பாளையங்களாக பிரித்து ஆண்டிருக்க வேண்டும்.மூவன் என்பது மூன்று பேரின் வலிமையை ஒருங்கே கொண்டவன் என்பதை குறிக்கும் சொல்லாகும். இப்பகுதியில் அதிகாரம் செலுத்திய முத்தரைய மன்னர்கள் பற்றி வரலாற்று பூர்வமாக தகவல் இல்லை என்றாலும், விளங்கு பெயர்கள் மூலம் இதனை அறிய முடிகிறது. இன்றும் சில  முத்தரைய குடும்பங்கள் சோழன் என்ற பட்டப்பெயருடன் விளங்குகிறது. மேலும் பெண்களுக்கு நாச்சியார் எனவும் பெயர் வைத்துக்கும் பழக்கம் இன்றும் உள்ளது.. நாச்சியார் என்பது சோழமன்னர்களின் பட்டத்தரசிகளை மரியாதையை நிமித்தமாக மக்கள் அழைத்து வந்துள்ளனர். சோழர்களுடன் நெருங்கிய தொடர்பு அல்லது அவர்களின் வழிவந்தவர்கள் முத்தரையர் என்பதும் இதன் மூலம் புலனாகிறது. வீரம் செறிந்தவர்கள் முத்தரைய இன மக்கள் கலையிலும் ஆர்வமுடையர்கள் என்பதை திருவெள்ளறை ஸ்வஸ்திக கிணறு, குடைவரை கோயிலும்  விளக்கும். வரலாற்று ஆய்வாளர்கள் முறையாக ஆய்வு செய்து இவற்றை வெளிக்கொணர வேண்டும் என்பதே எங்களின்  ஆசை. 

1 கருத்து:

  1. 69.சாத்தனுனூர் சா.விமல்ராஜ், தலயாரி தெரு தஞ்சாவூர் ஜில்லா கும்பகோணம் அருகில் வாலும் முத்தரையர்

    பதிலளிநீக்கு